பெரியகுளம்: பெரியகுளம் திருமூலர் தபோவனத்தில் இருந்து பழநிக்கு இருமுடி கட்டிக்கொண்டு 200 பக்தர்கள் பாதாயாத்திரை சென்றனர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு முன் திருமூலர் தபோவனம் உள்ளது. தினமும் ஏராளமானோர் தியானம் செய்வது, பூஜைகள் நடக்கும். இங்கிருந்து 45 வது ஆண்டாக 200 பக்தர்கள் நேற்று பழநிக்கு பாதாயாத்திரை சென்றனர். சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் இருமுடி கட்டி செல்வதுபோல், பழநி முருகனை தைப்பூசத்தன்று தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் இருமுடி கட்டியும், காவடி எடுத்து சென்றனர். ஏற்பாடுகளை திருமூலர் தபோவனம் தலைவர் பாலசுப்ரமணி தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.