Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியநாயக்கன்பாளையத்தில் 151 ... கிருஷ்ணாபுரம் பச்சைவாழியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் நாளை வருஷாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 செப்
2012
11:09

கடையநல்லூர்: பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் 9ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நாளை (8ம் தேதி) நடக்கிறது. விழாவில் மழைவேண்டி 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.அருணகிரிநாதரால் பாடல்பெற்று புகழ்பெற்று விளங்கும் திருமலைக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் முடிந்து தொடர்ந்து 8 ஆண்டுகளாக வருஷாபிஷேக விழா நடத்தப்பட்டு வருகிறது. 9ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நாளை (8ம் தேதி) நடக்கிறது. இக்கோயிலில் சுமார் 5 கோடி ரூபாய் செலவில் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்படுகிறது.
இதனையடுத்து வருஷாபிஷேக தினத்தன்று சுவாமியை தரிசிப்பதற்காக பக்தர்களுக்கு திருமலைக்கோயில் அடிவாரம் முதல் மலைக்கோயில் வரை சென்றுவர இலவசமாக வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு மங்கள இசை நாதஸ்வரத்துடன் விழா துவங்குகிறது. 8 மணிக்கு மேல் யாகசாலை பூஜை, வேதிகார்ச்சனை, வேதபாராயணம், ஜடாக்ஜத ஹோமம், தொடர்ந்து மழைவேண்டி 108 சங்காபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனை, 12 மணிக்கு சிறப்பு மகா அபிஷேகம், விமான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.மதியம் 1 மணிக்கு சிறப்பு அன்னதானம், 2 மணிக்கு சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு ஈரோடு ராஜாமணி பாகதவரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி மலை மீது உலா வருதலும், அதனை தொடர்ந்து வாணவேடிக்கையும் நடக்கிறது. 8.30 மணிக்கு பைரவர் பூஜை, தீபாராதனை நடக்கிறது.வருஷாபிஷேக விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் கார்த்திக், வருஷாபிஷேக உபயதாரரும், முன்னாள் திருப்பணிக்குழு தலைவருமான அருணாசலம், பரமேஸ்வரி அருணாசலம் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar