பதிவு செய்த நாள்
03
பிப்
2023
05:02
அனுப்பர்பாளையம்: திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரியில் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்த பெருமான் திருக்கோவில் உள்ளது. கோவிலில், தைப்பூச தேரோட்டம் வருகிற 5 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணி முதல், 6:00 மணிக்குள் நடக்கிறது. விழாவையொட்டி, வருகிற 5 ந் தேதி மாலை 3:30 மணிக்கு மஹா அபிஷேகம், 4:00 மணிக்கு தீபாராதனை, மாலை 4:15 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், நிகழ்ச்சி நடக்கிறது.திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் அபினவ், தொடங்கி வைக்கிறார். தேர் கோவிலை சுற்றி 5:30 மணிக்கு தேர் நிலையை அடைகிறது. முன்னதாக, நேற்று 2 ந் தேதி இரவு 8:00 மணி முதல், 8:30 மணி வரை வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. இன்று 3 ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 7:45 மணி முதல், 9:30 மணி வரை கோமாதா பூஜை மற்றும் திருத்தேர் பிரதிஷ்டை பூஜை நடைப்பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் பவானி, தக்கார் பெரிய மருதுபாண்டியன், திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் கந்தசாமி, ஆகியோர் செய்து வருகின்றனர்.