Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைப்பூசம்: முருகன் கோயில்களில் ... வடலூர் சத்திய ஞான சபையில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் வடலூர் சத்திய ஞான சபையில் 7 திரைகளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநியில் களைகட்டிய தைப்பூசம் : பால்குடம் சுமந்து பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
வடபழநியில் களைகட்டிய தைப்பூசம் : பால்குடம் சுமந்து பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

05 பிப்
2023
09:02

 சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடந்தது. தொடர்ந்து மூலவர், முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம் 1:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, பக்தர்கள் எடுத்து வந்த பாலால், முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.பின், செண்பகப்பூ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இரவு 8:30 மணிக்கு பழநி ஆண்டவர், நான்கு மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இவ்விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை, ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்தனர்;

வேண்டுதலையும் நிறைவேற்றினர். தைப்பூசத்தை முன்னிட்டு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், பாரிமுனை கச்சாலீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜ பெருமான், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் ஆகியவற்றில், தெப்ப உற்சவம் விமர்சையாக நடத்தப்படுகிறது.

வடபழநியில் விசேஷ ஏற்பாடு: வடபழநி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த 5,000 பால் குடம் எடுத்து வந்தனர். அந்த பால், ஐந்து பெரிய பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து, ஸ்டீல் குழாய் வாயிலாக அர்த்த மண்டபத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. பின், முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்பட்டது. - -நமது நிருபர்- -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar