பதிவு செய்த நாள்
05
பிப்
2023
09:02
ராமநாதபுரம்: இராமநாதபுரம் முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற்றது. குண்டுகரை சுவாமிநாத சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழா நடந்தது. இக்கோயிலில் நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு ஹோமம், அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சக்திவேலுக்கு தீர்த்த வாரி உற்சவம் நடந்தது. பின்னர் மாலை 5:00 மணிக்கு முருகன் சக்தி வேலுடன் மயில் வாகனத்தில் முத்து அங்கி அலங்காரத்தில் வீதி வலம் வந்தார். மாலை 6:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோயிலை அடைந்தார். பின்னர் தீப ஆராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.
*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நேற்று காலை 9:00 மணிக்கு தீர்க்க வாரி உற்சவம் நடந்தது.
*இன்று காலை 11:00 மணிக்கு நயினார்கோவில் நாகநாத சுவாமிக்கு மஞ்சக்கொல்லை வைகை ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது.
கமுதி: கமுதி அருகே கொடுமலூர் குமரக்கடவுள் முருகன் கோயிலில் தைப்பூசம் முன்னிட்டு சிறப்புபூஜை நடந்தது. முதுகுளத்தூர்,கமுதி ,அபிராமம், பரமக்குடி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்தனர்.குமரக்கடவுள் முருகனுக்கு எலுமிச்சம்,பழச்சாறு,திரவிய பொடி, நெல்லிப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், ஆரஞ்சு, மாதுளை, பழம் வகைகள், இளநீர் உட்பட 33 வகையான அபிஷேகங்கள் நடந்தது. சிவாச்சாரியார் நவநீதகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று முதுகுளத்தூர் முருகன் கோயில், வழிவிடு முருகன் கோயில், செல்வி அம்மன் கோயில் ,பத்ரகாளியம்மன் கோயில், கமுதி முருகன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்,பூஜைகள் நடந்தது.