ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் குருபுஷ்ய உற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2023 08:02
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் உள்ளது. இங்கு, ராமானுஜர் வாழ்ந்த காலத்தில், தை மாதம், பூச நட்சத்திரத்தில், ராமானுஜரின், தானுகந்த திருமேனி சிலை, பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிகழ்வை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் தை மாதம் மூன்று நாட்கள் குருபுஷ்யம் விழாவாக, ஸ்ரீபெரும்புதுாரில் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு குருபுஷ்யம் விழா கடந்த 3ம் தேதி துவங்கியது. தைப் பூச தினமான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்திலும், மாலை சந்திர பிரபை வாகனத்திலும் ராமானுஜர் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்.