பதிவு செய்த நாள்
06
பிப்
2023
08:02
தஞ்சாவூர், மாசிமக பெருவிழாயொட்டி, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ளிட்ட 12 சிவாலயங்ளிலும், 5 பெருமாள் கோவில்களிலும், 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும், மகாமக விழா சிறப்புடையது.
அத்துடன், ஒவ்வொரு ஆண்டு மாசி மாதத்தில், மகம் நட்சத்திரம், பவுர்ணமியன்று, மாசிமக விழா நடைபெறுவது வழக்கம். அன்று மகாமக குளத்தில் ஆதிகும்பேஸ்வரர் மங்களாம்பிகை உள்ளிட்ட 12 கோவில்களுக்கான தீர்த்தவாரி நடைபெறுவதையொட்டி, ஏராளமானோர் புனித நீராடுவர்.இத்தகைய சிறப்பு பெற்ற மாசிமக விழாவை முன்னிட்டு, பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக, கோவிலில் முன்புறமுள்ள தேருக்கு, 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பின் முகூர்த்தகாலுக்கு அபிஷேகங்கள் செய்து, தேரின் மேல் பந்தக்கால் நடப்பட்டது.மாசிமக விழா வரும் மார்ச்.4ம் தேதி விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் ஆகிய 4 தேரோட்டமும், 5ம் தேதி சண்டிகேஸ்வரர் தேரோட்டமும், 6ம் தேதி மாசி மக தீர்த்தவாரி மகா மககுளத்தில் நடைபெறுகிறது. இதில், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணக்குமார் உள்ளிட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.