நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச விழா அம்பாளுக்காக நடராஜர் ஆனந்த நடனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2023 10:02
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் தைப்பூச திருவிழாவில் சுவாமி நடராஜப் பெருமான், அம்பாளுக்காக ஆனந்த நடனம் ஆடினார். இன்று தைப்பூச திருவிழா தெப்ப உற்சவம் நடக்கிறது.
நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜன.26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 4ம் நாளான 29ம் தேதி திருநெல்வேலி எனப் பெயர் வரக்காரணமாக அமைந்த நெல்லுக்கு வேலியிட்ட வைபவம் நடந்தது. தைப்பூச திருவிழாவில் நேற்று முன்தினம் தாமிரபரணியில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. சவுந்தரசபை நடனம் காந்திமதி அம்பாள் சன்னதியை அடுத்த சவுந்தரசபையில் பிருங்கி ரத முனிசி ரேஷ்டர்களுக்கும், அம்பாளுக்கும் நடராஜர் ஆனந்த நடனம் ஆடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுவாமியின் ஆனந்த நடனத்தில் அம்பாள் மெய்மறந்து ரசித்த நேரத்தில் சுவாமி மறைந்தார். தொடர்ந்து திவிநாயகர் ன்னதி முன் அம்பாளுக்கு, சுவாமி காட்சி வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அம்பாளுக்காக , சுவாமி ஆனந்த நடனம் ஆடும் உற்சவம் தமிழகத்திலேயே நெல்லையப்பர் கோயிலில் மட்டுமே நடக்கிறது.
இன்று தெப்பஉற்சவம் : வெளித்தெப்பமான சந்திர புஷ்கரணியில் பஞ்ச மூர்த்திகளுடன் இரவு 7ணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது