தாண்டிக்குடி , கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடியில் தைப்பூச விழா வெகு விமர்சியாக நடந்தது. விழாவில் சுவாமிக்கு பல்வேறு பகுதியிலிருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்த காவடிகள், பால், பன்னீர், புஷ்ப காவடிகள் தீர்த்தம் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கொடைக்கானல் குறிஞ்சியாண்ட வர், பூம்பாறை குழந்தை வேலப்பர், தாண்டிக்குடி பாலமுருகன், பண்ணைக்காடு சுப்ரமண்ய சுவாமி, வில்பட்டி வெற்றிவேலப்பர் கோயில்களில் தைப்பூச விழா சிறப்பாக நடந்தது. அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.