பெ.நா.பாளையம்: பெரியதடாகம் அனுவாவி சுப்பிரமணியர் கோவிலுக்கு உஜ்ஜையனூர் கிராமத்தில் இருந்து திரளான பக்தர்கள் பால் காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
பெரியதடாகத்தில் உள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று முன்தினம் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. விழாவையொட்டி நேற்று மயில் வாகனத்தில் முருகன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தைப்பூச திருவிழாவின் மறுநாள் காவடி செலுத்துதல் நிகழ்ச்சி நடக்கும். நேற்று சின்னதடாகம், உஜ்ஜையனூர், வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நடந்து சென்று பால் காவடி செலுத்தினர். நிகழ்ச்சியில், யூ.ஜே., ஜமாப் குழுவினர் பங்கேற்றனர்.