பதிவு செய்த நாள்
08
பிப்
2023
08:02
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவில் திருஊடல் நிகழ்ச்சி, தெப்பத்திருவிழா நடைபெற்று உற்ஸவம் நிறைவடைந்தது.
பழநி மலைக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா, ஜன.29ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் புதுச்சேரி சப்பரம்,தந்த பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்க குதிரை, தங்கமயில் வாகனங்களில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி, புறப்பாடு ரதவீதியில் நடைபெற்றது. தைப்பூச திருவிழாவில் பிப்.3ல் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்றது. அதன்பின் வெள்ளி ரதத்தில் சுவாமி எழுந்தருளினார். பிப்.4. திருத்தேரில் எழுந்தருளி திருத்தேரோட்டம் ரத வீதிகளில் வலம் வந்தது. (பிப்.7) நேற்று தைப்பூச திருவிழாவில் பத்தாம் நாள் திருவிழாவான நேற்று காலை, வள்ளி, முத்துக்குமாரசாமி திருமண வைபவத்தால், தெய்வானை கோபித்துக் கொள்ள, வீரபாகு தூதராக சென்று சமாதானம் செய்து, கோயில் கதவை திறக்கும் திரு ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கோயில் தெப்ப குள மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுவாமி எழுந்தருளி தெப்ப உற்ஸவம் நடந்தது. இரவு கொடி இறக்குதல் நடைபெற்று தைப்பூச உற்சவம் நிறைவு அடைந்தது.