புதுச்சத்திரம் : சேந்திரக்கிள்ளை முனியனார் கோவிலில் வரும் 10 ம் தேதி லட்சதீப திருவிழா நடக்கிறது. புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை முனியனார் கோவிலின் 77 வது ஆண்டு லட்சதீப திருவிழா வரும் 10 ம் தேதி நடக்கிறது. அதையொட்டி கோவிலைச் சுற்றி அகல் விளக்குகள் வைப்பதற்கு கோவிலைச் சுற்றிலும் மண் மேடைகள் அமைக்கும் பணி நடக்கிறது. லட்சதீப விழாயொட்டி, காலை 10.00 மணிக்கு முனியனார், அய்யனார், விநாயகர், பொன்னியம்மன், நல்லநாயகி சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை 5.00 மணிக்கு அலங்கார காவடியுடன், கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து, மாலை 6.00 மணிக்கு தீபங்கள் ஏற்றி லட்சதீப திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.