காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 35 நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியலில் செலுத்திய பணம் தங்கம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவற்றை கணக்கிடும் பணியை நேற்று புதன்கிழமை 8.2.2023 கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு. தாரக சீனிவாசலு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு , வங்கி அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் கணக்கிடும் பணியை காலை 7:00 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது. இதில் பணமாக ஒரு கோடியே 83 லட்சத்து 29 ஆயிரத்து 810, தங்கம் 109 கிராம், வெள்ளி 550 கிலோ, வெளிநாட்டு பணம் 138 வந்ததாக கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தெரிவித்தார்.