பதிவு செய்த நாள்
10
பிப்
2023
05:02
வால்பாறை, வால்பாறையிலுள்ள, கொடுங்கலுார் பகவதியம்மன் கோவிலில் நேற்று மஹா கும்பாபிேஷகம் நடந்தது.
வால்பாறை, காமராஜ் நகரிலுள்ள, கொடுங்கலுார் பகவதி அம்மன் கோவில் திருப்பணி கடந்த ஆறு மாதங்களாக நடந்தது. திருப்பணி நிறைவடைந்த நிலையில், மஹா கும்பாபிேஷக விழா துவங்கியது. விழாவையொட்டி, அதிகாலை, 4:00 மணிக்கு ஸ்ரீவிக்னேஷ்வரபூஜை, சங்கல்பம், லேதிகார்ச்சனை, யாக வேள்வி, நாமசந்தனம், ஸ்பர்ஸஹந்தி மூல மந்திரயாகம், ஜெயாதி ஹோமம், மஹாபூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது. தீர்த்த கலசத்துடன் பக்தர்கள் கோவிலை வலம் வந்த பின், காலை, 5:30 மணிக்கு மஹா கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிேஷக விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.