காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், பிரம்மோற்சவம் வரும் 24ம் தேதி, துவங்க உள்ளது. காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் காமாட்சியம்மன் கோவில் மாசி மாத பிரம்மோற்சவம், வரும் 25ம் தேதி அதிகாலை 5:00 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்காக கடந்த மாதம் 26ம் தேதி பந்தக்கால் நடப்பட்டது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வரும் 24ம் தேதி, காலை சண்டிஹோமமும், மாலையில் வெள்ளி மூஷிகம் புறப்பாடும் நடக்கவுள்ளது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினசரி காலை, மாலையில், வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. மார்ச் 8ம் தேதி காலை விஸ்பரூப தரிசனமும், இரவில் விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.