பதிவு செய்த நாள்
10
பிப்
2023
05:02
சூலூர்: மு.க.புதூர் அங்காளம்மன் கோவிலில், வரும், பிப். ,19 ம்தேதி குண்டம் மற்றும் தேர் திருவிழா நடக்கிறது.
சூலூர் அடுத்த முத்துக்கவுண்டன் புதூர் அங்காளம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. மு.க., புதூர், காளியாபுரம், ராசிபாளையம், அருகம்பாளையம் கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில், சிவராத்திரியை ஒட்டி, குண்டம் மற்றும் தேர் திருவிழா நடப்பது வழக்கம். வரும், 18 ம்தேதி இரவு, 9:00 மணிக்கு, அபிஷேக, அலங்கார பூஜையும், பள்ளைய பூஜை, குண்டத்துக்கு பூ போடுதல் ஆகியவை நடக்கின்றன. வரும், 19 ம்தேதி காலை, 8:00 மணிக்கு, குண்டம் இறங்குதலும், மாலை, 6:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது. விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.