பதிவு செய்த நாள்
10
பிப்
2023
06:02
காஞ்சிபுரம்:தை மாத சங்கடஹர சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கத்தில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகருக்கு, நேற்று மாலை சந்தனம், ஜவ்வாது, தேன், பால், தயிர், விபூதி அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. சின்ன காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெரு திருக்கச்சியம்பதி விநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காந்தி சாலை, வன்னீஸ்வரர் கோவில் சித்தி செல்வ விநாயகர், வி.என்.பெருமாள் தெரு விக்னராஜ விநாயகர், வரதராஜபுரம் தெரு வரசித்தி விநாயகர், திருக்காலிமேடு ஆனந்த விநாயகர், சவுராஷ்டிரா தெரு செல்வகணபதி, பாலாஜி நகர் சிந்தாமணி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவிலில், நேற்று சங்கடஹரசதுர்த்தி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.