பதிவு செய்த நாள்
10
பிப்
2023
06:02
மேட்டுப்பாளையம்: குட்டையூரில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில், முப்பெரும் விழா நடைபெற்றது. மேட்டுப்பாளையம் குட்டையூர் அருகே, மாதேஸ்வரன் மலை அடிவாரத்தில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேக ஆறாம் ஆண்டு விழா, மகாலட்சுமி, ஆஞ்சநேயர் கோவில் பூமி பூஜை, அன்னதான கூடம் திறப்பு ஆகிய விழா முப்பெரும் விழா இரண்டு நாட்கள் நடந்தன. நேற்று காலை மங்கள இசையுடன் காலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து யாகப் பூஜை, ஸ்தாபித் தேவதா, புரணாகதி ஹோமம் ஆகிய யாக பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து மகாலட்சுமி கோவில், ஆஞ்சநேயர் கோவில் பூமி பூஜையும், அன்னதான கூடம் திறப்பு விழாவும் நடந்தது. இதில் திரைப்பட பாடகர் மனோ, ஜமீலா மனோ, உமா மகேஸ்வரி யுவராஜ், சாந்தி திருமலைசாமி உள்பட கோவில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.