காளஹஸ்தி மகா சிவராத்திரி விழா : ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி க்கு அழைப்பிதழ்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2023 10:02
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் மிகப் பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடக்க உள்ள வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவிற்கு ஆந்திர மாநில முதல்வர் ஒய். எஸ் .ஜெகன்மோகன் ரெட்டி க்கு பிரம்மோற்சவ அழைப்பிதழ்களை ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி தலைமையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு. தாரக சீனிவாசலு மற்றும் உறுப்பினர்கள் கோயில் வேத பண்டிதர்கள் மரியாதை பூர்வமாக சந்தித்து அழைப்பிதழ்களை வழங்கினர்.மேலும் முதல்வருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சிவன் கோயில் தீர்த்த பிரசாதங்களை வழங்கிய கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்தனர் .முதல்வரை பிரம்மோச்சுவத்திற்கு அழைப்பு விடுத்ததோடு ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி பேசுகையில் சிவம் டு சிவம் சாலை பணிகள் விரைந்து முடிக்க உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதே போல் அறங்காவலர் குழு தலைவர் பேசுகையில் தங்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி சமயத்தில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் 14 துணை கோயில்கள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக தெரிவித்தார் . மேலும் சிவன் கோயில் மாஸ்டர் பிளான் பணிகளும் விரைந்து நடக்க நடவடிக்கை மேற்கொள்ள உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததின் பேரில் முதல்வரின் உதவியாளரை வரவழைத்து தொடர்புடைய பணியை விரைந்து முடிக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.மேலும் மாநில கவர்னர் விஷ்வபூஷன் ,இதே போல் மாநில அறநிலைத்துறை அமைச்சர் கொட்டு.சத்யநாராயணா , மாநில அமைச்சர் பொத்சா.சத்யநாராயணா மற்றும் மாநில அறநிலையத்துறை ஆணையாளர் ஹரி ஜவஹர்லால், உட்பட ஸ்ரீ காளஹஸ்தி எம்எல்ஏ திருப்பதி எம்பி குருமூர்த்தி எம்எல்ஏ எம்எஸ் பாபு சித்தூர் எம்எல்ஏ ஜெங்காளப் பள்ளி சீனிவாசலு சத்தியவேடு எம்எல்ஏ கோனேட்டி. ஆதிமூலம் மற்றும் காணிப்பாக்கம் கோயில், விஜயவாடா துர்க்கை அம்மன் கோயில், ஸ்ரீசைலம் போன்ற கோயில்களின் அதிகாரிகளுக்கும் அறங்காவலர் குழு தலைவருக்கும் அழைப்பிதழ்களை வழங்கி ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் பிரம்மோற்சவத்தில் கலந்துகொண்டு ஸ்ரீ ஞானப்பிரசுனாம்பிகா சமேத ஸ்ரீ காளஹஸ்திஸ்வரரை சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.