காளஹஸ்தி மகாசிவராத்திரி விழா: ஹம்ச - யாளி வாகன சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2023 08:02
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோத்தின் நான்காம் நாள் காலை ஹம்ச - யாளி வாகன சேவை நடைபெற்றது.
ஸ்ரீகாளஹஸ்தி கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சுவாமி அம்மையார்களின் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேளதாளங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கங்காதேவியுடன் சிவபெருமானை அன்ன வாகனத்திலும், ஞானப் பிரசுனாம்பிகை தாயாரை யாளி வாகனத்திலும் அமரச் செய்து சிறப்பான கற்பூர ஆரத்திகளை சமர்ப்பித்தனர். தொடர்ந்து நான்கு மாட வீதிகளிலும் சிவன் நாம முழக்கங்கள் எழுப்பப்பட்டன மேள தாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க, வாகன சேவையில் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து ஹரஹர மஹாதேவா சம்போ சங்கரா என்ற கோஷங்களுடன் சாமி தரிசனம் செய்தனர் அன்னம் நீரிலிருந்து பாலை பிரிப்பது போல், பக்தர்களின் தீய குணங்களை நீக்கி, முக்தியின் பாதையில் செல்ல உதவுகிறது என்று புராணங்கள் கூறுகின்றன. இதில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு. தாரக சீனிவாசலு, கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.