திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2023 08:02
துாத்துக்குடி :திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிழக்கு கோபுரம் மற்றும் சால கோபுரம் திருப்பணிகளுக்கான பாலாலயம், பந்தல்கால் நடும் விழா நடந்தது. துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2009ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். தற்போது கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் துவங்கி உள்ளன. ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி, அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என ரூ.300 கோடி மதிப்பில் பணிகள் செப்டம்பரில் துவங்கி நடந்து வருகிறது. ஹெச்.சி.எல் நிறுவனத்தின் சார்பில் கும்பாபிஷேக திருப்பணிகளும் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக கோயில் கிழக்கு கோபுரம், சண்முக விலாச மண்டப நுழைவு வாயிலில் உள்ள சாலகோபுரம் திருப்பணிக்கான பாலாலயம் நேற்று காலை 8:00 மணிக்கு நடந்தன. தொடர்ந்து கிழக்கு கோபுரம் அருகில் பந்தல் கால் நடப்பட்டது. மரத்திலான கோபுர சிற்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. நிகழ்வில் ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில் வேலவன், கோயில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் கணேசன் ஹெச்.சி எல் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீமதி சிவசங்கரன், கோயில் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், துணை ஆணையர் வெங்கடேஷ், பேஷ்கார் ரமேஷ், உதவி பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன், வேல் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், பணியாளர்கள் செய்திருந்தனர்.