பதிவு செய்த நாள்
17
பிப்
2023
11:02
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா அம்மன் பூக்கள் அலங்காரத்துடன் வீற்றிருக்கும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா அம்மன் பூக்கள் அலங்காரத்துடன் வீற்றிருக்க துவங்கியது. இதன் விழாவில் பரம்பரை அறங்காவலர்கள், கோயில் நிர்வாக உறுப்பினர்களின் குடும்ப பெண்களால் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்ய கோயில் வளாகத்தில் வண்ண பூ கோலங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று பூசொரிதல் விழா நடக்கிறது. இதையொட்டி கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் காலை 9:30 மணிக்கு ஏகதீப ஜோதி தரிசனம் ,தொடர்ந்து தெய்வீகவாழை கற்பூர பூஜை, தெய்வரூப ஆகாய தீபதரிசன பூஜைகள் ,காலை 10:00 மணிக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் கோட்டை மாரியம்மன் எழுந்தருள பூத்தேர் வீதி உலா நடக்கிறது.
மேற்கு ரதவீதி, பென்சனர்தெரு, கோபாலசமுத்திரம் மேற்கு கரை, சத்திரம் தெரு, கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி ,தாலுகா அலுவலக ரோடு, பழநி ரோடு வழியாக வலம் வந்து கோயிலை வந்தடைகிறது. பூத்தேர் வீதி உலாவில் பக்தர்கள் பூக்களை காணிக்கையாக செலுத்துவர். கோயிலின் முதல் மண்டகப்படியையொட்டி பூஜை திருப்பணி, விழா ஏற்பாடுகள் குறித்து மேற்பார்வைத்தலைவர் சுந்தரராஜன் தலைமையில் பொது செயலாளர் மேடா பாலன், இணை செயலாளர் சந்தானம் உட்பட நிர்வாகிகள் ஆலோசனை செய்தனர்.