காளஹஸ்தி மகா சிவராத்திரி விழா : ராவண வாகனத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2023 11:02
காளஹஸ்தி: திருப்பதி, காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 4 ஆவது நாள் கங்கா பவானி சமேத பரமேஸ்வரர் ராவண வாகனத்திலும் ஞானப் பிரசுனாம்பிகை தாயார் ( மயூர) மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சர்வ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளை கோயில் அர்ச்சகர்கள் செய்தனர்.தொடர்ந்து உற்சவ மூர்த்திகளை நான்கு மாட வீதிகளுக்கு ஊர்வலமாக கொண்டு வந்து தங்க ராவண வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் தங்க மயில் வாகனத்தில் ஞானப் பிரசுனாம்பிகை தாயார் ஊர்வலத்தில் முன்னர் செல்கையில் மூஷிக வாகனத்தில் விநாயகர், சப்பரத்தில் ஸ்ரீ வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணிய சுவாமி, சண்டிகீஸ்வரர் மற்றும் பக்த கண்ணப்பர் சாமி அம்மையார் களை பின் தொடர்ந்து சென்று நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். சுவாமி அம்மையார்களை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நான்கு மாத வீதிகளில் திரண்டு கற்பூர ஆரத்திகளை சமர்ப்பித்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றினர்.