பதிவு செய்த நாள்
17
பிப்
2023
12:02
மந்தாரக்குப்பம்: ஊத்தங்கால் கிராமத்தில் 47 அடி உயர முருகன் சிலை கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கால் கிராமத்தில் வள்ளி, தெய்வானை உடனுறை தணிகைவேல் முருகன் ஆலயம் மற்றும் 47 அடி உயர முருகன் சிலை கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. விழாவையொட்டி கடந்த 12 ம் தேதி விநாயகர் வழிபாடு, கணபதி ேஹாமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து பூஜைகள் நடந்தது. 15ம் தேதி மாலை 5:00 மணியளவில் ஜந்தாம் கால பூஜையும், மாலை 6:00 மணியளவில் ஆறாம் கால பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து தத்துவார்ச்சனை, நாமகர்ணம், மகாபூர்ணாகுதி 9:00 மணியளவில் நடந்தது. காலை 09.30 மணியளவில் கடம் புறப்பாடாகி முருகன் சிலைக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. சுற்றுப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஊத்தங்கால் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி உதயகுமார் தலைமையில் விழா குழுவினர்கள் குருசாமி, ஜெயராஜ், சசிகுமார், விஜயகுமார், ரவிக்குமார், விஜயலட்சுமி, செந்தாமரைக்கண்ணன், பன்னீர்செல்வம், முருகன், பரமசிவம், ஊர் பொதுமக்கள் மற்றும் பழனி பாத யாத்திரை பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.