சித்தலூர் கோவில் மாசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2023 06:02
தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் மாசித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சித்தலூர் மணிமுக்தா ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் மாசி திருவிழா மகா சிவராத்திரி தினமான நாளை இரவு கொடியேற்றத்துடன் தூங்குகிறது. முன்னதாக மணிமுக்தா ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் எடுத்துச் சென்று பூஜைகள் நடத்தப்படுகிறது. தினமும் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. வரும் 26 ம் தேதி மயான கொள்ளை திருவிழாவும் அடுத்த நாள் 27ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. தமிழக முழுவதும் இருந்து பலரக்கணக்கான மக்கள் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். விழா ஏற்பாடுகளை அறநிலைத்துறை அதிகாரிகள், கோவில் தர்மகர்த்தா மற்றும் பூசாரிகள் செய்துள்ளனர்.