வேலங்குடித் திருவிழா துவங்கியது: பிப்.20 ல் பாரி வேட்டை உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2023 06:02
திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஒன்றியம் வேலங்குடியில் கருப்பர் கோயில் திருவிழா காப்புக் கட்டி துவங்கியது. பிப்.20 ல் பாரிவேட்டை அம்மன் புறப்பாடு நடைபெறும்.
வேலங்குடியில் சாம்பிராணி வாசகர் உறங்காப்புளி கருப்பர் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்.15 இரவு சுவாமிக்கு காப்புக் கட்டி விழா துவங்கியது. நேற்று அங்காளம்மன் கோயிலில் சுவாமி அழைத்து சென்று கப்பரை நடக்கும். தொடர்ந்து பக்தர்கள் கருப்பருக்கு விரதத்தை துவக்கினர். நாளை சிவராத்திரி இரவு பூஜைகளும், பிப். 20ல் பாரி வேட்டையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் சிங்க வாகனப் புறப்பாடும், கிராமத்தினர் கூடி வழிபாடும் நடைபெறும். தொடர்ந்து பிப். 22ல் முதல் நாள் திருவிழா துவங்கும். அங்காள அம்மன் கோயில் உற்ஸவ அம்மன் பச்சை வாழைக்குடிலில் எழுந்தருளல் நடைபெறும். தொடர்ந்து மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும். பக்தர்கள் பச்சை வாழை கட்டியும், கரும்புத் தொட்டில் கட்டியும், அரிவாள் படைத்தும் கருப்பருக்கு நேர்த்தி செலுத்துவர். பிப்.25ல் மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவடையும்.