இன்று மகா சிவராத்திரி : எம பயம் நீங்க இறை வழிபாடு செய்யுங்க!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2023 09:02
இன்று மகா சிவராத்திரியையொட்டி தமிழகத்தில் சிவாலயங்களிலும் விழா நடக்கிறது. மகாசிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை மகாசிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள். இந்த ஆண்டு மகா சிவராத்திரி இன்று பிப். 18ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும், பஞ்ச பூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஏதாவது ஒரே ஒரு சிவராத்திரி விரதம் இருந்தாலே போதும் மனிதப் பிறவி எடுத்தமைக்கான பலனை அடைந்துவிடமுடியும் என்கிறார் அகத்தியர். சிவராத்திரி தினத்துக்கு முதல் நாளோ அல்லது அதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்போ நாம் நம்மை மனதளவில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். மகா சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என சிவ புராணம் கூறுகிறது.