பதிவு செய்த நாள்
19
பிப்
2023
09:02
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் பெரியகோவிலில், மகா சிவராத்திரி நாளில் சனி பிரதோஷமும் இணைந்த அற்புதமான நாளில், நந்தியம் பெருமானுக்கு நடந்த சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளாமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
சோமவார நாளான திங்கள்கிழமையிலும், சனிக்கிழமையிலும் வரும் பிரதோஷம் மிகவும் வலிமையும், வளம் அருளும் பிரதோஷமாக விளங்குவதாக கருதப்படுகிறது. சனிப்பிரதோஷமும் மகா சிவராத்திரியும் இணைந்தநாளில், நமசிவாய மந்திரத்தையும், பதிகங்களையும் பாராயணம் செய்து, பிரதோஷ பூஜையிலும், இரவு மகா சிவராத்திரி பூஜைகளிலும் கலந்துக்கொண்டால், நல்ல சத்விஷயங்களும் சத்பலன்களுமாக கிடைக்கப் பெறலாம் என சிவாச்சாரியார் தெரிவிக்கின்றனர். அப்படியாக, தஞ்சாவூர் பெரியகோவிலில் இன்று(18ம் தேதி) மாலை நடந்த பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம்,திரவியப்பொடி,விபூதி உள்ளிட்ட மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்து, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளாமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரினசம் செய்தனர். தொடர்ந்து, இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜை, அதிகாலை அர்த்தஜாம பூஜைகள் நடைபெறுகிறது.