பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள உரப்புளி ஊராட்சி கள்ளிக்கோட்டை அரசமக்காள் கோயில் மகா சிவராத்திரி விழாவில் பூக்குழி இறங்கும் விழா நடந்தது. இது கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி நாளில் இரவு பூக்குழி உற்சவம் நடப்பது வழக்கம். இதன்படி கள்ளிக்கோட்டை, உரப்புளி, லட்சுமணன் குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கலந்து கொண்டு பூக்குழி விழாவில் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோயில் குடிமக்கள் பொங்கல் வைத்து, முடி காணிக்கை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.