Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சியில் திருக்கச்சி நம்பிகள் ... சபரிமலை அய்யப்பன் கோவிலில் சுகாதார சீர்கேடு! சபரிமலை அய்யப்பன் கோவிலில் சுகாதார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னாளபட்டியில் பாரம்பரிய காமன் பண்டிகை
எழுத்தின் அளவு:
சின்னாளபட்டியில் பாரம்பரிய காமன் பண்டிகை

பதிவு செய்த நாள்

22 பிப்
2023
12:02

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் 138 ஆண்டு பாரம்பரிய காமன் பண்டிகை, நேற்று இரவு துவங்கியது.

சின்னாளபட்டி கடைவீதியில் உள்ள காமய (காமன்) சுவாமி கோயில் திருவிழா, ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடத்தப்படுகிறது. சிறப்பு பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு தினம் ஒரு கட்டளைதாரர் வீதம் 15 நாட்களுக்கு வழிபாடு நடக்கும். தினமும் கட்டளைதாரர்கள் வழங்கும் பலவித பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, ஆராதனைகள் நடப்பது வழக்கம். நிறைவாக, மாசி பௌர்ணமியில் காமன் தகன விழா நடக்கும்.

இந்த ஆண்டுக்கான விழா, நேற்று இரவு மூன்றாம் பிறை தரிசனத்துடன் பிருந்தாவன தோப்பு ராமஅழகர் கோயிலில் துவங்கியது. முன்னதாக பேக்கரும்பு, மா, ஆமணக்கு, அரசு, அரளி இலை, பூக்களால் சுவாமி அலங்கரித்தல் நடந்தது. பிறை தரிசனத்தை தொடர்ந்து, பரம்பரை நிர்வாக அறங்காவலர் ஜமீன்தார் முத்துக்குமார் தலைமையில் ராமா நகர் சுவாமிக்கு சிறப்பு பூச்சிகள் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட காமன் சுவாமியை, பூசாரி பால்பாண்டி தோளில் சுமந்தபடி கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். கோயில் பீடத்தில் சுவாமி ஊன்றுதலுடன், விசேஷ பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழா குழு தலைவர் சிவமுருகேசன், செயலாளர் ராஜாராம், பொருளாளர் பொன்ராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர். மார்ச் 7ல் காமன் தகனமும், மார்ச் 9ல் சுவாமி எழுப்புதலும் நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல் : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் ராஜகோபுரம் சேதமடைந்ததை அடுத்து கோயிலில் நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று இலகு ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று காந்திமதி அம்மன் தவழ்ந்த ... மேலும்
 
temple news
திருப்பூர், காங்கயம் ரோடு, பள்ளக்காட்டுப்புதுார் பரமசிவன் கோவிலில் உள்ள மந்திரகிரி ... மேலும்
 
temple news
அன்னூர்; 150 ஆண்டு பழமையான மதுர காளியம்மன் கோவில் திருப்பணி வேகமாக நடைபெறுகிறது. அன்னூர் அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar