பதிவு செய்த நாள்
22
பிப்
2023
07:02
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில், கடந்த 19ம் தேதி, குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 26ம் தேதி, மாலை 4:00 மணிக்கு, அம்மன் மற்றும் முருக பெருமானுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது.
மார்ச் 4ம் தேதி, விநாயகர், முருகன், அம்மனுக்கு அலங்காரம், சிறப்பு பூஜை நடக்கிறது. மாலையில், வள்ளிக்கும்மி நிகழ்ச்சியும், இரவு 7:00 மணிக்கு, ஆற்றிலிருந்து கோவிலுக்கு சக்தி அழைத்து வருதல், அம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா நடக்கிறது. 5ம் தேதி, காலை மாவிளக்கு, அலங்கார பூஜை, மாவிளக்கு வழிபாடு நடக்கிறது. அன்று காலை, 10:00 மணிக்கு, குண்டம் திறப்பு, சிறப்பு பூஜை நடக்கிறது. மாலையில், குண்டத்துக்கு பூ (மரத்துண்டு) போடுதல், ஆற்றிலிருந்து கோவிலுக்கு பூவோடு அழைத்து வருதல், அம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா நடக்கிறது. வரும், 6ம் தேதி, அதிகாலை 2:30 மணிக்கு, பூச்செண்டு மற்றும் கரகங்கள் அழைத்து வருதல், அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கிறது. அதன்பின், காலை 6:00 மணிக்கு, அக்னி அபிஷேகம், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வரும், 7ம் தேதி, காலை மஞ்சள் நீராடுதல், அம்மனுக்கு அலங்கார பூஜை; 8ம் தேதி, மாலை மஹா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.