காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2023 05:02
காளஹஸ்தி: திருப்பதி, காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் பதினோராவது நாள் இன்று ( வியாழக்கிழமை)பகல் 12 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 14 2 2022 அன்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றத்துடன் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற்றதை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற ஆதி தம்பதியர்கள் ஆன சிவன் - பார்வதியின் திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து இன்று வசந்தோற்சவம் நடைபெற்றது.
முன்னதாக காளஹஸ்தீஸ்வரரும் ஞானப்பிரசு நம்பிக்கை தாயாரும் கேடிக வாகனங்களில் திரிசூலத்துடன் நான்கு மாட வீதிகளில் பஞ்சமூர்த்தி களுடன் ஊர்வலம் நடைபெற்றது .இதனைத் தொடர்ந்து கேடிகங்களில் சாமி அம்மையார் கோயில் அருகில் உள்ள ஜல விநாயகர் கோயில் அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அருகில் எழுந்தருளி உற்சவமூர்த்திகளுக்கு ( சுவாமி அம்மையார்களுக்கு) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது .முன்னதாக கோயில் பிரதான அர்ச்சகர் தலைமையில் வேத பண்டிதர்கள் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .தொடர்ந்து சுகந்த திரவியங்களான பால் தயிர் பஞ்சாமிர்தம் மஞ்சள் குங்குமம் பன்னீர் இளநீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சாமி அம்மையார்களுக்கு சம்பிரதாய முறைப்படி அபிஷேக ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக. சீனிவாசலு கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு அரங்காவலர் குழு உறுப்பினர்கள் வசந்த ஜலத்தினால் நீராடி வழிபட்டனர். தொடர்ந்து கோயில் திருமஞ்சன கோபுரம் அருகில் உள்ள (சூரிய புஷ்கரணி) கிணற்றில் உள்ள நீரினால் திரிசூலத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க திரிசூல ஸ்நானம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோயில் பிரதான அர்ச்சகர் தலைமையில் கோயில் அர்ச்சகர்கள் வேத பண்டிதர்கள் புனித நீராடினர். இதனைத் தொடர்ந்து இன்று இரவு சிம்மாசனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும் காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் 4 மாட் வீதிகளில் வலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.