திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் மாசி மகத் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2023 08:02
திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறையில் உள்ள திரிபுரசுந்தரி சமேத தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் மாசி மகத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவட்டத்துறை திரிபுரசுந்தரி சமேத தீர்த்தபுரீஸ்வரர் கோவில், தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் முதல் தலம். வெள்ளாற்றங்கரையில் அமைந்துள்ள சப்த துறைகளில் முக்கியமானது. இக்கோவிலில் கொண்டாடப்படும் மாசி மகத்திருவிழா சிறப்பு வாய்ந்தது. நேற்று காலை 11மணிக்கு மாசி மகத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பதாம் நாள் திருவிழா, மார்ச்.5ம் தேதி திருத்தேர் விழாவும், 6ம் தேதி மாசிமகம், தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.