கோவில்களின் தல புராணம் டிஜிட்டல் வடிவாக மாற்றுவது குறித்த ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2023 06:02
காஞ்சிபுரம் கோவில்களின் தல புராணம் டிஜிட்டல் வடிவாக மாற்றுவது குறித்த ஆய்வு கருத்தரங்கம் புதுச்சேரியில் நடந்தது.
புதுச்சேரி: ஜெர்மன் நாட்டின் ஹைடெல் பெர்க் அறிவியல் மற்றும் மானுடவியல் அகாடமி சார்பில், தென்னிந்திய தல புராணங்களை டிஜிட்டல் வடிவாக மாற்றுவது குறித்த ஆய்வு கருத்தரங்கம் புதுச்சேரி துய்மா வீதியில் உள்ள எக்கோல் பிரான்ஸ்சே எக்ஸ்ட்ரீம் ஓரியண்ட் பிரெஞ்சு பள்ளியில் பேராசிரியர் யூடி உஸ்கென் தலைமையில் நேற்று நடந்தது. இதில், தென்னிந்திய கோவில் நகரமான காஞ்சிபுரம் பல நூற்றாண்டுகளாக இந்து மதத்தின் மிகவும் புனிதமான ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.
இந்து மதத்தில், இத்தலத்திற்கு உள்ள முக்கியத்துவத்திற்கு சான்றாக இதன் பேரில் ஸ்தலபுராணங்கள் (சமஸ்கிருதத்தில் மாஹாத்ம்யம் அல்லது ஸ்தலப்புராணம்) என்ற பெயரில் இருந்து வருகிறது. மேலும் காஞ்சிபுர தல புராணங்களின் முழு தொகுப்பினையும் வேண்டிய சிறு குறிப்புகளுடன் மொழிபெயர்த்து, டிஜிட்டல் பதிப்புகளை தயாரிப்பதற்கான திட்டத்தை ஜெர்மன் நாட்டின் ஹைடெல் பெர்க் அறிவியல் மற்றும் மானுடவியல் அகாடமி கடந்தாண்டு துவக்கியுள்ளது. அதைத்தொடர்ந்து, சமஸ்கிருதத்திலும் தமிழிலுமாக மொத்தம் எட்டு நூல்களை உள்ளடக்கிய நூல்களை உரைபதிப்பாக வெளியிடுவதை தவிர அவற்றில் விவரிக்கப்பட்டுள்ள கோவில்கள் மற்றும் தல புராணங்களை பதிவு செய்யும் கலை படைப்புகள், வாய்மொழிக் கதைகள், மற்றும் உற்சவ நிகழ்ச்சிகள் ஆகியவற்றை இத்திட்டம் ஆவண படுத்துகிறது. இத்தரவுகளை உரை பதிப்புகளுடன் இணைந்து வெளியிடும்போது, காஞ்சி தலபுராணங்களின் அனைத்து தகவல்களும் டிஜிட்டல் சூழலில் அவை எந்த வடிவத்தில் பதிப்பாகிருந்தாலும் அவற்றை தடையில்லாமல் அணுவதற்கான ஒருங்கிணைந்த முழு தொகுப்பு ஒன்று உருவாக்கப்படுகிறது. அதற்கான திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு 16 ஆண்டுகளுக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதையொட்டி, நேற்று அது தொடர்பான ஆய்வு கருத்தரங்கம் நடந்தது இதில், எக்கோல் பிரான்ஸ்சே எக்ஸ்ட்ரீம் ஓரியண்ட் பிரெஞ்சு பள்ளி இயக்குனர் டொமினிக், ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர்கள், தல புராணங்கள் அறிந்த சாஸ்திரிகள் கலந்து கொண்டனர்.