அன்னூர்; வடக்கலூர், பொங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை துவங்குகிறது.
வடக்கலூரில், பழமையான பொங்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக கருங்கல்லில் மூன்று நிலை கோபுரம், மகா மண்டபம், பரிவார தெய்வங்கள், சன்னதிகள் அமைக்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கும்பாபிஷேக விழா வரும் 1ம் தேதி காலை தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. மாலையில் முதற்கால வேள்வி பூஜை நடக்கிறது. வரும் 2ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், எண் வகை மருந்து சாத்துதலும், மாலையில் கூட்டுப் பிரார்த்தனையும் நடக்கிறது. வருகிற 3ம் தேதி காலை 8:00 மணிக்கு, மூலஸ்தானம், கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதை யடுத்து மகா தீபாராதனை நடக்கிறது. கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சாமிகள் தலைமை வைக்கிறார். கூனம்பட்டி கிரிவாச சிவம் தலைமையில் சர்வ சாதகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.