திரிச்சூர்: கேரளாவில் திரிச்சூர் ஸ்ரீகிருஷ்ணன் கோயிலுக்கு ரோபோ யானை நன்கொடையாக வழங்கப்பட்டது.
கேரளாவின் திரிச்சூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் பல்வேறு சடங்குகளை செய்வதற்காக ரோபோ யானையை விலங்குகள் நல அமைப்பான பீட்டா நன்கொடையாக வழங்கியுள்ளது. 11 அடி உயரமும், 800 கிலோ எடை கொண்ட ரோபோ யானைக்கு இரிஞ்சடப்பள்ளி ராமன் என பெயரிடப்பட்டுள்ளது. .5 லட்சம் செலவில் ரோபோ யானையை உருவாக்கப்பட்டுள்ளது. மின்சார சக்தியால் இயங்க கூடிய இந்த யானையின் உட்பகுதியில், 5 இயந்திரங்கள் உள்ளன. அதனால், உண்மையான யானையை போன்றே இந்த ரோபோ யானை அதன் தலை, கண்கள், காதுகள், வாய், வால் மற்றும் தும்பிக்கை ஆகியவற்றை அசைக்க கூடியது. கடந்த ஞாயிற்று கிழமை நடந்த திருவிழாவில் யானை பயன்படுத்தப்பட்டது.