ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோயிலில் மாசிதிருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2023 10:03
ஆழ்வார்திருநகரி: ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோயிலில் மாசிதிருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டி நடந்தது. காலை 6:45 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் கொடிமரம் முன்பாக எழுந்தருளினார். காலை 7:30 மணிக்கு கொடிபட்டம் சுற்றி வரப்பட்டு மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழா நாட்களில் தினமும் மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா நடைபெறுகிறது. மார்ச் ஐந்தாம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு கருட வாகனத்தில் சுவாமி பொழிந்துநின்ற பிரானும், ஹம்ச வாகனத்தில் சுவாமி நம்மாழ்வாரும் எழுந்தருளும் வீதி உலா நடைபெறுகிறது. மார்ச் ஒன்பதாம் தேதி ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. மார்ச் 10ம் தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் வீணை மோகினி திருக்கோலத்திலும் சுவாமி பொழிந்து நின்றபிரானும் எழுந்தருளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 11ம் தேதி இரவில் சுவாமி ர் எழுந்தருளும் உற்சவமும் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.