பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மாசிமகம் உற்சவம் இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2023 04:03
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த இளையனார் வேலுார் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி மகம் உற்சவத்தை முன்னிட்டு இன்று 2ம் தேதி இரவு சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு 23 கிராமங்களுக்கு செல்லும் திருவிழா நடக்கிறது.
வரும் 10ம் தேதி மாலையில் சுவாமி கோவிலை சென்றடைகிறார். காஞ்சிபுரம் அடுத்த இளையனார் வேலுார் பகுதியில் பழைமையான பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த கோவில் மாசி மகம் உற்சவத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலிப்பது வழக்கம். இந்த ஆண்டு இன்று 2ம் தேதி துவங்குகிறது. இரவு 9:00 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து புறப்படுகிறார். முதலில் மோட்டூர், வில்லிவலம் கிராமங்களுக்கு செல்கிறார். மறு நாள் 3ம் தேதி அருகில் உள்ள தாங்கி கிராமத்திற்கு அதிகாலை, 5:00 மணிக்கு செல்கிறார். பின் அங்கிருந்து நாயக்கன்பேட்டை, பெண்டை, கருக்குபேட்டை, அய்யன்பேட்டை, ஆகிய கிராமங்களுக்கு செல்கிறார். இவ்வாறு பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பாலசுப்ரமணியர் வரும் 6ம் தேதி இரவு சுங்குவார்தோப்பு பகுதியில், சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறும். அங்கிருந்து புறப்பட்டு 7ம் தேதி அவளூர் சென்றடைவார்.அப்பகுதியில் சுவாமி வீதியுலா நடைபெறும். வரும் 10ம் தேதி வீதியுலா நிறைவு பெற்று அன்று மாலை 4:00 மணிக்கு பாலசுப்ரமணியர் இளையனார் வேலுார் கோவிலை சென்றடைகிறார். இந்த மாசி மகம் உற்சவத்தின் போது சுவாமி 23 கிராமங்களுக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.