திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2023 04:03
திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பூச்சொரிதலுடன் 17.02.2023 தொடங்கியது. மார்ச் 7ம் தேதி வரை திருவிழா நடைபெறும் விழாவில் தினமும் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 3ல்) காலை துவங்கியது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.