பதிவு செய்த நாள்
04
மார்
2023
04:03
பழநி: பழநி, அ.கலையம்புத்தூரில், அக்ரஹார பகுதியில் எழுந்தருளியுள்ள கல்யாணி அம்மன், கைலாசநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழநி, அ.கலையம்புத்தூரில், அக்ரஹார பகுதியில் கல்யாணி அம்மன், கைலாசநாதர் திருக்கோயில் உள்ளது. விநாயகர், கல்யாணியம்மன், கைலாசநாதர், வள்ளி, தெய்வானை உடன் சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சூர்ய, சந்திரர், நந்தி தேவர், பைரவர் சன்னதிகள் உள்ளன. சன்னதிகளுக்கு கும்பாபிஷே யாக யாகசாலை அமைக்கப்பட்டது.
யாகசாலையில் முதல் கால பூஜை பூஜைகள் மார்ச்.1ல், துவங்கியது. நான்கு கால யாக பூஜைகள் நேற்று அதிகாலை நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து காலை 7:00 மணிக்கு விநாயகர், கல்யாணியம்மன், கைலாசநாதர், வள்ளி, தெய்வானை உடன் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சன்னதி விமானங்களுக்கு அர்த்தநாரி சிவாச்சாரியார், ராம்கனேஷ் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் ஓத, அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன 48 நாள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஹிந்து அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி ராமநாதன், அடியார்கள் சேவா சமிதி தலைவர் வேத நாராயணன், செயலாளர் நடராஜன், பொருளாளர் சதீஷ்சுந்தரேசன், ஒருங்கிணைப்பாளர்கள் கைலாஷ்பாபு, கண்ணன் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.