மேலுார்: திருவாதவூர் திரவுபதையம்மன் கோயில் திருவிழா பிப்.22 கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று சுவாமி ஊர்வலம் மற்றும் திருக்கல்யாணம், மார்ச் 5 சக்தி கங்காரக்கோட்டையும், மார்ச் 7 அர்ச்சுனன் தவசு, மார்ச் 8 எரிசோறு கொடுப்பது மற்றும் அம்மன் கூந்தல் விரிப்பு நிகழ்ச்சியும், மார்ச் 9 கூந்தல் முடிப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மார்ச் 10 ல் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இவ் விழாவில் மேலுார், திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.