ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் தெப்பதிருவிழா : திருப்புளி வாகனத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2023 08:03
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் மாசி தெப்பதிருவிழாவையொட்டி 4ம் நாள் இரவு திருப்புளி வாகனத்தில் வீதி உலா வந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நவத்திருப்பதி கோவில்களில் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் மாசி திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி. இந்த ஆண்டுக்கான திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவின் 4ம் நாள் இரவு திருப்புளி வாகனத்தில் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று 5ம் தேதி கருட சேவை நடைபெறுகிறது. 9ம்தேதி தேரோட்டம், 10ம் சுவாமி நம்மாழ்வார், சுவாமி பொலிந்துநின்றபிரான் எழுந்தருளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 11ம் தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளும் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.