சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி தெப்ப உற்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2023 06:03
சிவகங்கை: சிவகங்கை காசிவிஸ்வநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா விமரிசையாக நடந்தது.
சிவகங்கை நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி அம்மன் சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மகா திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு இன்று தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பத்தின் கரைகளில் உள்ள மதில் சுவரில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். முன்னதாக உற்சவர் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மனுடன் சர்வ அலங்காரத்தில் கோவில் திருக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.