Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயிலில் ... ரெணபலி முருகன் கோயிலில் மாசித் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் மாரியம்மன் மாசி பூக்குழி திருவிழா : 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
நத்தம் மாரியம்மன் மாசி பூக்குழி திருவிழா : 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

07 மார்
2023
11:03

நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி பெருந்திருவிழாவில் 15 நாள் விரதம் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கியும், தீச்சட்டி எடுத்தும் நேர்த்திக் கடனை செலுத்தினர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில்  தரிசனம் செய்தனர்.

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பூக்குழி பெருந்திருவிழா கடந்த பிப்.20 கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்.21 பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்த அருவியில் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோயிலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக் கட்டி 15 நாட்கள் விரதத்தை தொடங்கினர். அன்றிரவு அம்மன் குளத்திலிருந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட கம்பம் கோவிலில் வைக்கப்பட்டு அதில் பக்தர்கள் பால் ஊற்றி தரிசித்தனர். பிப்.24 அம்மன் மயில் வாகனத்தில் பவனியும், பிப்.27 தேர்ச்சட்டம் போடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. பிப்.28 அம்மன் சிம்மம் வாகனத்திலும், மார்ச் 3 காலை பூக்குழி கண் திறத்தல் நிகழ்ச்சியும், அன்று இரவு அம்மன் சரஸ்வதியாக அன்ன வாகனத்திலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 15 நாட்களும் கோவிலில் பக்தர்கள் பால்குடம், கரும்புத் தொட்டில், மாவிளக்கு, அங்கப்பிரதட்சணம், பொங்கல் வைத்தல், அபிஷேக தீர்த்தம் எடுத்தும் பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர்.


விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல் அழகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தொடர்ந்து காந்திநகர் பொது மக்களால் மதியம் கழுகு மரம் ஊன்றப்பட்டது. காமராஜ் நகர் இளைஞர்கள் கழுவு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடக்கும். கழுகு மரம் ஏறி முடிந்தவுடன் கோவில் பரம்பரை அறக்காவலர் பூசாரிகள் பூக்குழி இறங்க, தொடர்ந்து அம்மன் குளத்தில் புனித நீராடி காப்புக் கட்டிய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் பூக்குழி இறங்கினர். விழாவின் நிறைவாக நாளை 8 காலை 6 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி அம்மன் குளம் சென்றடைதல் நிகழ்ச்சி நடக்கும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மாரியம்மன் பூப்பல்லக்கில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அதிகாலை 4.30 மணிக்கு கோவிலுக்கு வருவதுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar