நாகர்தீர்த்தம் நாகேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி பூஜை : சுவாமிக்கு 21 வகை அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2023 06:03
சோழவந்தான்: கொடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நாகர்தீர்த்தம் மலையடிவாரத்தில் உள்ள நாகம்மன், அன்னகாமு, கூனலம்மன் கோயிலில் பௌர்ணமி பூஜை நடந்தது.
அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து திருமணத் தடை, குழந்தையின்மை உள்ளிட்ட பிரச்னைகள் நிவர்த்தி அடைய பக்தர்கள் ஏராளமானோர் அம்மனிடம் வேண்டி விளக்கேற்றினர். நாகதோஷம் நிவர்த்தி அடைய பாலாபிஷேகம் செய்வது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இங்கு மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோயில் நிர்வாகி பாலசுப்பிரமணியம் ஏற்பாடுகளை செய்திருந்தார். நாகதீர்த்தம் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பௌர்ணமி பூஜை நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். நிர்வாகி தமிழரசன் குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்தனர். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக வேண்டி குத்துவிளக்கு பூஜை நடந்தது. அம்பாளுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான திரவ அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.