ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா; மார்ச் 10ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2023 11:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா மார்ச் 10ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மார்ச் 21ல் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், 22ல் தேரோட்டமும் நடக்கிறது.
தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் 13 நாட்கள் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தல் எனும் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள். இந்த வருடமும் மார்ச் 10 அன்று கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா துவங்குகிறது. அன்று காலை 7:00 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. அன்று முதல் தினமும் காலையில் அம்பாள் மண்டகப்படி எழுந்தருளும், இரவு வீதி உலாவும் நடக்கிறது. மார்ச் 21 மதியம் 1:15 மணிக்குமேல் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், மார்ச் 22 காலை 11:15 மணிக்குமேல் தேரோட்டமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் முத்துராஜா, செயல் அலுவலர் சத்யநாராயணன் மற்றும் ஹிந்து அறநிலைத்துறையினர் செய்து வருகின்றனர்.