பதிவு செய்த நாள்
09
மார்
2023
05:03
காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், புற்றுக்கோவில் என அழைக்கப்படும், பழமையான செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாத திருவிழா விமரிசையாக நடைபெறும். நடப்பு ஆண்டுக்கான விழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு, செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், மஹா தீபாராதனையும் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர். இரவு, மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய செல்லியம்மன், அரச மரத்தெரு, மேலாண்டை தெரு, கீழாண்டை தெரு உள்ளிட்ட பல முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா சென்றார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து, அம்மனை வழிபட்டனர். இரவு 11:00 மணிக்கு, ஆரணி ரோஜா நாடக மன்றத்தினரின் சமூக விழிப்புணர்வு நாடகம் நடந்தது. விழாவில், கூரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.