திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில், போர்மன்ன லிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற போர்மன்ன லிங்கேஸ்வரர் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தொடர்ந்து 5 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் இன்று, தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். விழாவில் மங்கலம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.