பதிவு செய்த நாள்
14
செப்
2012
12:09
ஈரோடு: ஈரோடு முனிசிபல் காலனி சாலை, சக்தி விநாயகர் கோவிலில், செப்., 19ம் தேதி சதுர்த்தி விழா நடக்கிறது.
ஈரோடு முனிசிபல்காலனி சாலையில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில், செப்.,19ம் தேதி, அதிகாலை, 4.30 மணிக்கு, கணபதி ஹோமத்துடன், விநாயகர் சதுர்த்தி விழா துவங்குகிறது. அன்று காலை, 5.30க்கு சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 6.30க்கு தங்க கவசம் சாத்துபடி செய்தல், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. அன்று இரவு, 8 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. 20ம் தேதி காலை, 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு தங்க கவசம் சாற்றுதல், இரவு, 8 மணிக்கு ஆன்மீகம் கலந்த நகைச்சுவை சொற்பொழிவு நடக்கிறது.
செப்., 21ம் தேதி காலை7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு தங்க கவசம் சாற்றுதல், இரவு, 8 மணிக்கு, "தலைவர் ராமனை விட, தொண்டன் அனுமனுக்கு காப்பியத்தில் ஏற்றம் கொடுத்தது சரியன்று என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடக்கிறது. செப்., 22ம் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு தங்க கவசம் சாற்றுதல், இரவு, 8 மணிக்கு இசை சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை, விநாயகர் நித்ய வழிபாட்டுக் குழுவினர் செய்து வருகின்றனர்.