பதிவு செய்த நாள்
14
செப்
2012
12:09
ஈரோடு: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், 26ம் தேதி புரட்டாசி பிரம்மோற்சவ தேர்த்திருவிழா நடக்கிறது.
வரும், 19ம் தேதி, மாலை, 7 மணிக்கு, கிராமசாந்தி, நகர சோதனையோடு, திருவிழா துவங்குகிறது. 20ம் தேதி காலை, 7.30க்கு யாகசாலை பூஜை, திருமஞ்சனம், தீபாராதனை, கொடியேற்றம் நடக்கிறது. மாலை, 7 மணிக்கு அன்ன வாகனத்தில் ஸ்வாமி வீதியுலா நடக்கிறது. 21ம் தேதி முதல், 25ம் தேதி வரை, காலை, 6 மணிக்கு, யாகசாலை பூஜை, திருமஞ்சனம் நடக்கிறது. அன்றைய தினங்களில், தினமும் மாலை, 7 மணிக்கு முறையே, சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருடசேவை, யானை வாகனத்தில் ஸ்வாமி பவனி நடக்கிறது. 25ம் தேதி மாலை 4.30க்கு திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கில் ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது.
செப்., 26ம் தேதி காலை, 6 மணி முதல் 7.30 மணிக்குள், சுவாமி திருத்தேர் எழுந்தருளல், 9 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. தேர்த்திருவிழாவையொட்டி, 26ம் தேதி காலை, 11 மணிக்கு செங்குந்தர் திருமண மண்டபத்தில், அன்னதானம் நடக்கிறது.செப்., 27, 28ம் தேதியன்று, காலை, 6 மணிக்கு யாகசாலை பூஜை, திருமஞ்சனம் நடக்கிறது. 27ம் தேதி மாலை, 7 மணிக்கு பரிவேட்டை, 28ம் தேதி மாலை, 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. 29ம் தேதி காலை, 4 மணிக்கு மஹாபிஷேகம், மஞ்சள் நீராட்டு நடக்கிறது. அன்று மாலை, 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு, வடை மாலை சாற்றுதல் நடக்கிறது.தக்காரும், அறநிலையத்துறை உதவி ஆணையருமான வில்வமூர்த்தி, கோட்டை பெருமாள் கோவில் செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.